Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table அரசியலமைப்புத் திருத்த மசோதா!

அரசியலமைப்புத் திருத்த மசோதா!

  • PDF
parliament-2010-04-22
presidenta2
dimujayarathna2
Dallus_Allahapperuma_MP_2
maithripalasirisena

அரசியலமைப்புத் திருத்த மசோதா எதிர் வரும் 8 ஆம்  திகதி பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவூள்ளது. மேற்கொள்ளவூள்ள திருத்தங்களுள் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர் பான திருத்தமே பரவலாகப் பேசப்படுகின்ற விடயமாக உள்ளது.

இத் திருத்தங்கள் தொடர்பாக எதிரணிக் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட நிலைப்பாடு இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதென அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன எதிர்ப்பதாகக் கூறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து!


தற்போதிருக்கும் அரசியலமைப்பின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது போகுமென அரசியலமைப்பு நிபுணர்கள் அன்று கருதினர்.

எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று கட்சியை பலமிக்கதாக கட்டியெழுப்ப எமக்கு முடிந்துள்ளது. இது சு+ரியனும் சந்திரனும் இருக்கும் வரையில் இருக்க வேண்டிய அரசியலமைப்பல்ல. நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அது மாறவேண்டும்.

அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றுக்காக மாற வேண்டும். மக்களின் இறைமையைப் பலப்படுத்தும் அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இதற்கமைய இவை மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.

நாம் இன்று அரசியலமைப்பொன்றை மக்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். இது மக்கள்மய அரசியலமைப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்திக்காகவூமே இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இந்த அரசியலமைப்புத் திருத்தமானது எனது பதவிக் காலத்தை நீடிக்கும் என்பது தவறு. இதன் மூலம் தேர்தலில் மீண்டும் போட்டியிட சந்தர்ப்பமே வழங்கப்படுகிறது.

பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் சபாநாயகர்இ பிரதமர்இ எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அம்மூவரும் பிரதிநிதித்துவப்படுத்தாத தமிழ் அல்லது முஸ்லிம் இன பிரதிநிதிகள் இருவர் ஆகியோரைக் கொண்ட பாராளுமன்ற பேரவை கொண்டு வரப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஏற்படுத்திய அரசியலமைப்பேயன்றி இது எம்மால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பல்ல. பாராளுமன்ற த்திற்கு அதிகாரம் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம்.

எமக்குத் தௌpவானஇ நீண்ட பயணம் உள்ளது. மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் உள்ளன. அரசியலமைப்பு விடயத்தை காரணங்காட்டிக் கொண்டு நாம் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையைத் தட்டிக்களிக்க முடியாது.

பாராளுமன்றம் உயரிய ஸ்தானம் என்பதாலேயே மக்கள் பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைத் தருகின்றனர். எனவேஇ இங்கு கூறப்படும் ஆபத்து எதுவூம் இதில் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றாh;.

வரலாற்றில் இடம் பிடிக்கும்!

பிரதமர தி.மு. ஜயரட்ன

பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையூடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்புத் திருத்தமாக 18 ஆவது திருத்தம் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் நாட்டில் புதிய யூகத்தை ஏற்படுத்தும். அதனூடாக நாட்டில் மறுமலர்ச்சியூம்இ சுபீட்சமும் ஏற்படும். அரசியலமைப்பு என்பது நாட்டுக்கு உகந்தவகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப அவ்வப்போது திருத்தங்களைச் செய்வது அவசியம். இதைவிடுத்து காலங்கடந்த அரசியலமைப்பால் நாட்டுக்கு எந்த நன்மையூமே கிடைக்காது.

ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகிப்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு இத்திருத்தம் வழி செய்கிறது.

இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றமும் கூறியூள்ளது.

இதன்படி தாய்நாட்டின் மீது அன்புஇ பற்றுக்கொண்ட தலைவர் மூன்றாவது தடவையூம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கின்றது. அதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அவரை திரும்பவூம் ஜனாதிபதியாகத் தெரிவூ செய்வதா? இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் அதுவே ஜனநாயக முறைப்படி சரியானதுமாகும்.

பயங்கரவாதப் போக்கு கிடையாது!

அஸ்கிரிய மகாநாயக்க சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்

அரசாங்கத்தினால் முன்வைக்கப் பட்டிருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தில் எந்த பயங்கரவாதப் போக்கும் கிடையாது. நான் அதற்கு முழுமையாக ஆசிர்வாதம் வழங்குகிறேன். ஆதரிக்க வேண்டிய முக்கிய விடயங்களை ஐ.தே.க. ஆதரிப்பது அதன் தார்மீக பொறுப்பாகும்

நாடு தற்போது வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கி ன்றது. இதனால் நாட்டு மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டின் தலைமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் ஆளுமை படைத்துள்ளவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளங்குகிறார் என்பதை கடந்த கால அவரது சேவைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அவரது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காகவோ அல்லது அவரது விருப்பத்தின் பேரிலோ இந்த அரசியலமைப் புத் திருத்தம் முன்வைக்கப்படவில்லை. நாட்டுக்காகவே இவ்வாறான ஒரு மாற்றத்தை ஜனாதிபதியூம் அரசாங்கத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரு முறைக்கு மேலும் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்தல் மூலம் தெரிவூ செய்யூம் உரிமை உண்டு ஆகவே. மக்க ளின் ஆதரவூ இருக்கும் வரை ஜனாதிபதியாக யாருக்கும் இருக்க முடியூம்.

15க்கும் மேற்பட்ட ஐ.தே.க. எம்.பிக்கள் ஆதரவூ!

இளைஞர் விவகார அமைச்சா; டலஸ் அழகப்பெரும

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இத்திருத்தத்திற்கு கடந்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிக்க முன்வந்துள்ளனா;.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை 160க்கும் மேற்பட்ட வாக்கு களைப்பெற்று சபையில் நிறைவேறும.;

அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்த யோசனைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக ஐ.தே.க.இ ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் கூறியூள்ளன. ஆனால் அதே கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்கின்றனர். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்களால் எவ்வாறு இத் திருத்த யோசனைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியூம்?

இவர்களது செயற்பாடுகளே இவர்களது கூற்றுக்களைப் பொய்ப்பிக்கின்றன. அதனால் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைக்கு இவர்களது செயற்பாடுகள் எந்தப் பாதிப்பையூமே ஏற்படுத்தாது.

160க்கும் மேற்பட்ட வாக்குகள் பெறுவோம்!

மைத்திரிபால சிறிசேன

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை அடுத்துவரும் 48 மணித்தியாலங் களுக்குள் 160க்கும் மேற்பட்ட ஆதரவான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும்.

அரசியலமைப் புக்கான 18வது திருத்த யோசனை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கானதல்ல. மாறாக ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டை நீக்கவே நடவடிக்கை எடுத்திருக்கின்றௌம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியூம்இ மக்கள் விடுதலை முன்னணியூம் பெயர்ப்பலகையூ டன் மாத்திரமே உள்ளன. மாறாக அவை செயற்றிறன் உள்ள கட்சிகள் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும்இ நாட்டு மக்களுக்கும் அளித்து வரும் தூரநோக்கு மிக்க சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவே அக்கட்சிகள் பெயர்ப்ப லகைக்குள் முடங்கிப் போய் விட்டன.

மக்கள் விடுதலை முன்னணியினரால் விமர்சிக்கத்தான் முடியூம். மாறாக அரசாங்கம் நடாத்த முடியாதவர்கள். அதனால் தான் அவர்கள் எமது அரசிலிருந்து இடைநடுவில் வெளியேறினர்.

மறைந்த முன்னாள் பிரதமர்களான டி.எஸ்.சேனநாயக்கஇ டட்லி சேனநாயக்க போன்ற ஐ.தே.க. தலைவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்யப் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

ஆனால் தற்போதைய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியையே இல்லாமலாக்கி விட்டார்.

தொகுப்பு: எம்.ஜே.எம். தாஜுதீன்

06.09.2010