Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table 9300 பாடசாலைகளில் வாழ்க்கைத் திறனுக்கான ஆங்கிலம்!

9300 பாடசாலைகளில் வாழ்க்கைத் திறனுக்கான ஆங்கிலம்!

  • PDF
Student_scholss

இவ்வருடம் முதல் அமுலுக்கு

ஜனாதிகதியின் விஷேட செயற்திட்டமான வாழ்க்கைத் திறனுக்கான ஆங்கிலம் நாடளாவிய hPதியில் 9300 பாடசாலைகளில் இவ்வருடம் முதல் அமுலுக்குக் கொண்டுவரப்படவூள்ளது.

இத்திட்டத்திற்கென அரசாங்கம் 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கியூள்ளதுடன் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கும் வவகையில் 34 செயற்திட்டங்கள் இதற்கென தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கான முழுமையான செயற் திட்டத்தைத் தயாரிக்கும் நிகழ்வூ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் மீபேயிலுள்ள கல்வி தலைமைத்துவ வளர்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர உட்பட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதற்கான கருத்தரங்கொன்று இருநாள் நிகழ்வாக இடம்பெறுவதுடன் ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் சமிந்த வீரக்கொடி இதனை ஒழுங்கு செய்திருந்தார்.

ஒன்பது மாகாணங்களையூம் பிரதி நிதித்துவப்படுத்தும் கல்வியதிகாரிகள் 65 பேரின் பங்கேற்புடன் மேற்படி செயற்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற பாடசாலைகள் உட்பட நாட்டின் சகல பாடசாலை மாணவர்களும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறும் வகையில் இத்தேசிய திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது. (எஸ்.டி.எம்.ஐ.09.30)