Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table மார்ச் 31 வரை அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மார்ச் 31 வரை அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

  • PDF
Relief_ww

பொது  நிர்வாக  உள்நாட்டலுவல்கள்  அமைச்சு  அறிவிப்பு

நிவாரணப் பணிகளை சீராகவூம் கிரமமாகவூம் துரிதமாகவூம் மேற்கொள்வதற்காக சம்பந்த்ப்பட்ட பிரதேச அரச ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி வெள்ளம்  மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியவசிய சேவைகளாக கருதப்படுகின்றன.

இவ்வாறு  பாதிக்கப்பட்ட சகல மாவட்டங்களிலும் கடமைபுரியும் அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் மார்ச் 31ம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட மாகாண சகல  தலைமை அதிகாரிகளுக்கும் இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான காரணங்களுக்காக விடுமுறை எடுக்க நேரும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களை ஒப்புவித்துஇ சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் தலைவர்களின் அனுமதி யுடனேயே விடுமுறைகளைப் பெற முடியும் எனவும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் எதுவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.12.00)