காதலர் தினத்தை முன்னிட்டு
தாய்லாந்தில் நடந்த உதட்டோடு உதடு பதித்து தொடர்ந்து முத்தம் கொடுக்கும் போட்டியில் 33 மணி நேரத்துக்கு மேல் முத்த மழை பொழிந்து 7 ஜோடி உலக சாதனை படைத்துள்ளன.
காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தின் பாட்டயா கடற்கரையில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் மாரத்தான் போட்டி நடந்தது.
அதில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.73000 மதிப்பிலான வைர மோதிரம் மற்றும் ரூ.1.45 லட்சம் ரொக்க பரிசையும் போட்டியை நடத்திய குழு அறிவித்தது.
முத்தம் கொடுக்கும் ஜோடிக்கு கொடுத்த 3 சதுர மீட்டர் இடத்தை விட்டு வெளியேறவோ உட்காரவோ தூங்கவோ கூடாது.
கழிவறை செல்ல மட்டும் அனுமதி உண்டு. இடையில் ஸ்ட்ரோமூலம் உணவு குடிநீர் கொடுக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட 14 ஜோடிகளில் 7 ஜோடி ஒவ்வொரு இடைவெளி இடையே நிர்ணயித்த விதியை மீறியதால் வெளியேறினர். இதற்கு முன்னர் ஜெர்மனை சேர்ந்த பெலிக்ஸ் வெர்த் (32) தாய்லாந்தை சேர்ந்த உரைரத் (21) என்ற ஜோடி 32 மணி 7 நிமிடங்கள் 14 வினாடிகள் இணைந்து தொடர் முத்த மழை பொழிந்தது சாதனையாக இருந்தது. (எஸ்.டி.எம்.ஐ.14.00)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...