Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table துரோகிகளை ஆட்சியில் அமர்த்த மக்கள் விரும்பவில்லை!

துரோகிகளை ஆட்சியில் அமர்த்த மக்கள் விரும்பவில்லை!

  • PDF
open_noro

நுரைச்சோலையில் ஜனாதிபதி உரை

தாய் நாட்டுக்கு துரோகம் இழைக்கும் எந்த அரசியல் கட்சியையும் ஆட்சியில் அமர்த்த இந்த நாட்டு மக்கள் தயாரில்லை என்பதை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தர்தல்மூலம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது நிலக்கரி அனல் மின் நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மாலை 6:25 மணிக்கு நுரைச்சோலையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகாவொட் மின்சாரத்தை தேசிய மின்சாரத்தோடு ஜனாதிபதி அதற்கென அமைக்கப்பட்டிருந்த விசேட மின்சார பொத்தானை அழுத்தி உத்தியோகபூர்வமாக இணைத்தார்.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

இருள் சூழ்ந்திருந்த யூகத்தை மாற்றி நாம் இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின்மூலம் முழு நாட்டையும் ஒளிபெறச் செய்துள்ளோம்.

தாய் நாடு பெற்ற வேற்றியே இந்த மின் உற்பத்தி நிலையமாகும்.
1980 ஆண்டில் இத்திட்டம் உருவாக்கப்பட்டபோதிலும் அரசியல் லாபத்திற்காக அன்றைய அரசாங்கம் இத்திட்டத்தை தள்ளிப்போட்டது.
இத்திட்டம் தொடர்பhக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை சில அரசியல் கட்சிகளும் சமய அமைப்புக்களும் தோற்றுவித்தன. இதன் பயனாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.
ஆனால் மக்களுக்கு உண்மை நிலையை நாம் படிப்படியாக விளக்கி அவர்களின் சம்மதம் பெற்று இன்று இந்த வெற்றியை அடைந்துள்ளோம்.
நாட்டில் பயங்கரவாதம் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில் 2006 ஆம் ஆண்டு இத்திட்டத்தை எமது அரசாங்கம் துணிவுடன் ஆரம்பித்தது.
அதேபோன்று பல சவால்களைச் சந்தித்தே நாம் கெரவலபிட்டிய மற்றும் மேல் கொத்மலை மின் உற்பத்தித் திட்டங்களை ஆரம்பித்தோம். சம்பூரிலும் விரைவில் மின் உற்பத்தி செய்வோம்.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் முதலாவது நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் இதுவேயாகும். மூன்று கட்டங்களை கொண்டிருக்கும் இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அதன் மூலம் 300 மெகா வார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று கட்ட நிர்மாண பணிகளும் பூர்த்தியானதும் 900 மெகா வார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றது.

மின்சாரம் இருளை விரட்டியடிக்கும். ஆனால் நாம் அதற்காக மாத்திரம் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. நாட்டை வளமாக்கும் விவசாயம் - மீன்பிடித்துறை மற்றும் ஏனைய தொழல்துறைகளிலும் மின்சாரம் பயன்படுத்தப்படவேண்டும்.

மின்சார உற்பத்தியில் அரசாங்கம் மேற்கொண்ட தூரநோக்கு நடவடிக்கைகள் காரணமான இன்று இலங்கையில் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக மின் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
மின் ஒளியால் கிராமங்கள் உயிர் பெற்றுள்ளன. அந்த மக்ளின் வாழ்க்கைத் தரம் கல்வித்துறை முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை முடக்க சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்கள் தாய் நாடடுக்கே துரோகம் விளைவிக்கின்றனர்.
இலங்கையின் அபிவிருத்திக்கு நிதி வழங்கவேண்டாமென வெளிநாடுகளுக்குக் கோரிக்கை விடுக்கின்றர்.

எனவேதான் தாய் நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் எந்த அரசியல் கட்சியையும் ஆட்சியில் அமர்த்த இந்த நாட்டு மக்கள் தயாரில்லை என்பதை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தர்தல்மூலம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளர்
நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அதன்மூலம் நாட்டின் ஜனநாயகம் உயிர்பெறுகின்றது
இனியூம் நாம் பிரிந்திருக்காமல் பேதங்கள் மறந்து ஒன்றிணைந்து தாய் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும்.
எம்மிடமுள்ள வளங்கைள முறையாக நாம் பயன்படுத்தி இந்த நாட்டின் எதிர்காலப் பரம்பரையினரின் வாழ்வை வளப்படுத்த நாம் திடசங்கற்பம் பூணவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட பல பிரமுகர்கள் உரைநிகழ்த்தினர். (எம்.ரி.-977)