Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table ராகம வைத்தியசாலைக்கு 46 கோடி ரூபா அன்பளிப்பு!

ராகம வைத்தியசாலைக்கு 46 கோடி ரூபா அன்பளிப்பு!

  • PDF
maithipalass

தனிநபர் வழங்கிய அதிகூடிய நன்கொடை

முதற்தடவையாக பெண்மணி ஒருவர் பெருமளவிலான தொகை ஒன்றை அரச வைத்தியசாலை ஒன்றுக்கு  நன்கொடையாக  வழங்கி  உள்ளார்.

கடவத்தை மகரவில் வசிக்கும் மாலனி ஆரியரத்ன என்ற கோடீஸ்வரப் பெண்மணி 46 கோடி ரூபா பெறுமதியான காணி வீடு மற்றும் கட்டடங்கள் அடங்கலான சொத்துக்களை ராகம போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

குறிப்பிடப்பட்ட கோடீஸ்வரப் பெண்மணி நன்கொடை சொத்துக்களுக்கான உறுதிப்பத்திரங்களை சுகாதார அமைச்சில் வைத்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம்  நேற்றுக் கையளித்தார்.

இலங்கையில் செல்வந்தர்களால் அரச வைத்தியசலை ஒன்றுக்க  வழங்கப்பட்டுள்ள அன்பளிப்புக்களில் ஆகக்கூடிய நன்கொடை இவை என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பெண்மணி ராகம போதனா வைத்தியசலைக்கு அண்மையில் சிகிச்சை பெறச் சென்றிருந்த சமயம் அந்த ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரியவை சந்தித்து தம்மிடம் இருக்கும் 46 கோடி ரூபா பெறுமதியான காணி  வீடு மற்றும் கட்டடங்கள் அடங்களான சகல சொத்துக்களையும் இந்த வைத்தியசலைக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

அதற்கேற்பவே அவர் இதனை வழங்கியுள்ளார். (எஸ்.டி.எம்.ஐ.09.30)