கூட்டுப் படைக்குள் குழப்பம்!
லிபியா மீதான தாக்குதலுக்கு தலைமை வகிப்பது யார் எனக் கேல்வி எழுந்துள்ளதுடன் கூட்டுப்படை தாக்குதலை முன்னின்று நடத்துவது யார் என்ற சிக்கல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சர்கோசி ஆகியோர் இது குறித்து தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேட்டோவை கூட்டுப்படைத் தாக்குதலுக்கு தலைமை வகிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே மூன்று நாட்டு தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நேட்டோ இந்தத் தாக்குதலுக்கு தலைமை வகிப்பதற்கு அந்த அமைப்பிலுள்ள சில அங்கத்துவ நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அதே போன்று நேட்டோ தலைமை வகிப்பதை அரபு நாடுகளும் விரும்பாது எனப் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் நேட்டோவின் பங்கு இருக்கக் கூடாது என அந்த அமைப்பில் இருக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கி விரும்புகிறது.
இந்நிலையில் நேட்டோ மேற்பார்வை செய்யாவிட்டால் தமது படை கூட்டுப் படையில் இருந்து விலகி விடும் என இத்தாலி எச்சரித்துள்ளது.
அதேபோன்று கட்டளை இடுவது யார் என்பது தெரியாமல் தமது படை கூட்டுப்படை தாக்குதலில் பங்கேற்காது என நோர்வே கூறியுள்ளது.
இது இவ்வாறு இருக்க இது சர்வதேச படையின் செயற்பாடு என்பதால் தமது தலைமையை எதிர்வரும் காலத்தில் கையளிக்கவுள்ளதாக எல்சல்வடோருக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.
ஜெர்மனியில் இயங்கும் அமெரிக்காவின் ஆபிரிக்க மண்டலத்திற்கான கட்டளைத் தளமே தற்போது முன்னணி வகிக்கிறது.
இதனிடையே கூட்டுப்படை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைக் கொண்ட அமைப்பொன்றை இந்தத் தாக்குதல்களுக்கு முன்னிலைப்படுத்தலாம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுப் குறிப்பிட்டுள்ளார். (எஸ்.டி.எம்.ஐ.10.00)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...