அடிபணியேன் என்கறார் கடாபி
புதிய சிலுவை யூத்தம் ஆரம்பமாகி உள்ளது எனவூம் இறுதியில் வெற்றி பெறுவோம் அதுவரை அடிபணியப் போவதில்லை எனவூம் கடாபி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலுக்கு இலக்கான பாப் அல் அசிசியா பகுதிக்கு நேற்று விஜயம் செய்த லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மூன்று நிமிடங்கள் நீடித்த இந்த உரையை லிபிய அரச தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புச் செய்தது.
‘நாம் முடிவில் வெற்றி பெறுவோம்’ புதிய சிலுவை யுத்தம் சிலுவை நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அனைத்து முஸ்லிம்களும் ஒன்று திரண்டு இதற்கு எதிராகப் போராட வேண்டும்.
நாம் அடி பணியப் போவதில்லை. நாம் பயப்படப் போவதுமில்லை. ஏவுகணைகளும் யுத்த விமானங்களும் எம்மைத் தாண்டிப் போகும் போது எமக்கு சிரிப்புத்தான் வருகிறது. இது குறுகிய காலமாக இருந்தாலும் நாம் அவர்களை வீழ்த்துவோம். நீண்ட காலமாக நீடித்தாலும் நாம் வீழ்த்துவோம்.
மிகப் பாதுகாப்பான விமான பாதுகாப்பு அரண் மக்கள்தான். இந்த அரணுக்கு மத்தியில்தான் நான் இருக்கின்றேன்.
நான் கீழ்வானத்தை அகற்ற முயலும் காற்றுக்குப் பயப்பட மாட்டேன். விமானங்கள் எறியும் கருப்பு பொருளுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன். எனது வீட்டில் நான் இருக்கி றேன். நான்தான் அதற்கு உரிமையாளன். நாளையை உருவாக்குபவன். நான் இங்கு இருப்பேன்! நான் இங்கு இருப்பேன்!! இங்கு இருப்பேன்! என்றார்.(எஸ்.டி.எம்.ஐ.10.30)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...