ஜனாதிபதி பணிப்புரை
வெளிநாட்டிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சரைக் கேட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவை மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற போது வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போதே வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இவ்வாறு அறிவூறுத்தியதாக அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் சுற்றாடல் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று கூறினார்.
அமைச்சர வையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்படி தகவல்களைக் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கென ஏற்பாடுகள் உள்ளன. அந்த ஒழுங்கு விதிகளை மீறியே தக்காளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணத்தினால் தான் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றார். (எஸ்.டி.எம்.ஐ.10.30)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...