அமைச்சர் பெளஸி சவூதியூடன் பேச்சுவார்த்தை
இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரை செல்வதற்கான வாய்ப்பை 8000 பேருக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை அமைச்சர் பௌசி மேற்கொண்டு வருகின்றார்.
அதற்கேற்ப அமைச்சர் பெளஸி இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான கோட்டாவை 8 ஆயிரமாக அதிகரிக்க வேண்டுமென சவூதி அரேபிய ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஹஜ் குழுவுக்குத் தலைமைதாங்கும் அமைச்சர் பெளஸி எதிர்வரும 27ம் திகதி சவூதி அரேபிய அமைச்சருடன் இது தொடர்பாகப் பேசவுள்ளார்.
ஹஜ் முகவர்கள் மத்தியில் பேசிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சவூதி அமைச்சர் டொக்டர் புவாட்பின் அப்துல் சலாம் அல் பரிஸியிடம் கடந்த ஆண்டு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2800 ஆக இருந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை 5800 ஆக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறாரென அமைச்சர் பெளஸி கூறினார்.
சில சக்திகள் இந்த விடயத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி பிரிவை உருவாக்க முயல்கின்றன எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹஜ் குழு அங்கத்தவர்கள் பொறுப்புணர்வு டனும் கெளரவத்துடனும் நடந்துகொள்வார்களென தான் நம்புவதாகக் கூறினார்.
இதேவேளை பான்கி மூனின் நிபுணத்துவக் குழுவின் அறிக்கையை ஹஜ் முகவர்கள் ஏகமனதாகக் கண்டித்தனர். இது நாட்டினதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென அமைச்சர் பெளஸி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (எஸ்.டி.எம்.ஐ.10.00)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...