Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table ரொபேட் ஓ பிளேக் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு நாளை!

ரொபேட் ஓ பிளேக் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு நாளை!

  • PDF
R_gl

த. தே. கூட்டமைப்பினருடன் நேற்று பேச்சு

இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் நாளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்கவுள்ளார்.

 

 

 

இந்த சந்திப்பு நாளை காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் ஐ.நா அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்றிரவு இலங்கை வந்தடைந்த மறுகனமே ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள ரொபேர்ட் ஓ பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. (எம்.ரி.977)