Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table கிளிநொச்சியில் ரொபேர்ட் ஓ பிளேக்!

கிளிநொச்சியில் ரொபேர்ட் ஓ பிளேக்!

  • PDF
robet

இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் இன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை வடக்கு நோக்கிச் சென்ற அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுவார்.

அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் குறித்தும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆராய்கிறார்.

தற்சமயம் கிளிநொச்சியில் உள்ள அவர் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுவார்.(எம்.ரி.-977)