கே.பி. சொல்கிறார்
புலிகள் மீண்டும் இலங்கையில் ஆயுத மோதலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால் இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும் இவ்வாறு புலிகளளுக்காக கடந்த காலங்களில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவரும்- அதன் தலைவருமாக பின்னர் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவருமான கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலைக்காக நான் இந்தியர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு. இந்த படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது- பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.
கடந்த 2 வருடங்களாக போர் ஓய்ந்து விட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். எங்களுக்கு பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் இருக்கின்றனதான். முன்னர் நடந்த பேச்சுக்கள் தோல்விதான். வரலாற்றில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளனதான். ஆனால் எப்போதுமே முடிந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாங்கள் அதனை எதிர்கொண்டுதானாகவேண்டும்.
இரு தரப்புக்களும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொண்டுதானாக வேண்டும். சேர்ந்து வாழ்வதற்கான (இரு இனங்களும்) வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் குமரன் பத்மநாதன் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.(எம்.ரி.-977)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...