Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here Category Table பல பகுதிகளில் மண்சரிவு அபாயம்!

பல பகுதிகளில் மண்சரிவு அபாயம்!

  • PDF
earth_slip
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் நிலவூவதாகவூம் அப்பிரதேச மக்கள் விழிப்புடன்  இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் மேல் பருவபெயர்ச்சி மழை ஆரம்பமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

கேகாலை  இரத்தினபுரி களுத்துறை  காலி  மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்  நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார தெரிவித்தார்.

ஆகவே இம்மாவட்டங்களின் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எதிர்வரும் நாட்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று தினங்களில் செய்த மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 60 மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு ஏனைய மாவட்டங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம் மண்சரிவு காரணமாக கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் நால்வர் உயிரிழந்துள்ளனர்.  (எஸ்.டி.எம்.ஐ.11.00)