பாடசாலை மாணவர்கள் மத்தியில் நாமல் சிறுவர் சுற்றாடல் அமைப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய நாமல் பூங்கா பாதுகாப்பத் திட்டத்துக்கு 20 வருட பூர்த்தியை முன்னிட்டு இப்புதிய நாமல் சிறுவர் சுற்றாடல் அமைப்புக்களை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான இதுபோன்ற திட்டங்களை சிறுவர்கள் மத்தியில் ஆரம்பிப்பதன் மூலம் அதனை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்து சிறந்த வெற்றியைப் பெறலாம் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 22 பாடசாலைகளில் எதிர்வரும் பொசன் பண்டிகையை அடுத்து ஆரம்பிக்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக நாட்டிலுள்ள 340 தேசியப்பாடசாலைகளில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் மூன்றாம் கட்டமாக ஏனைய பாடசாலைகளுக்கு இத்திட்டம் விஸ்தரிக்கப்பட உள்ளது.
கல்வி அமைச்சு சார்பாக அமைச்சின் விஞ்ஞானப் பிரிவூ இதற்கான நடவடிக்கைகளை தேசிய நாமல் பூங்கா பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய நாமல் பூங்கா பாதுகாப்புத் திட்டத்தின் பொறுப்பாளர் வனவாசி ராஹூல தேரர் உட்பட பல பிரமுகர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். (எஸ்.டி.எம்.ஐ.15.45)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...