Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here Category Table மீண்டும் கண்நோய் அபாயம்!

மீண்டும் கண்நோய் அபாயம்!

  • PDF
eyes

சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் கண்நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் காரணமாக கண் நோய் பரவுவதாகவும் நாளாந்தம் 100க்கும் மேற்பட்ட கண்நோயாளர்கள் சிகிச்சைக்காக கண் வைத்தியசாலைக்கு வருகை தருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் எஸ். ஏ. எச். லியனகே தெரிவித்தார்.

கண் சிவப்பாதல்  கண்ணீர் கொட்டுதல்  கண் வீக்கம்  வெளிச்சத்தை பார் க்க முடியாமை என்பஇவ இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

கண் நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு கைக்குட்டை  டவல்  உடைகள் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறும்  கைகளை சவர்க்காரத்தினால் கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்திய லியனகே  கண் நோயாளர்கள் பொது மக்கள் நடமாடும் இடங்களைவிட்டு ஒதுங்கி இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். (எஸ்.டி.எம்.ஐ.10.00)