ஸ்ரீ. சு. க. 60 ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி
நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும்வரை எத்தகைய சக்திகளாலும் எம்மைத் தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த 60 வருடகால வரலாற்றைப் பாடமாகக் கொண்டு எதிர்வரும் 60 வருடத்திலும் வெற்றிகரமாக முன்செல்லும் என தெரிவித்த ஜனாதிபதி- சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சகல இன- மத மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் கட்சியாக எதிர்காலத்திலும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு வெளிப்படையான கட்சி. எச் சந்தர்ப்பத்திலும் நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக் காத மக்கள் கட்சியாக தொடர்ந்தும் பலம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60வது தேசிய மாநாடு நேற்று அலரி மாளிகையில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் தி.மு.ஜயரட்ன- சிரேஷ்ட அமைச்சர்கள்- மதத் தலைவர்கள்- கட்சித் தலைவர்கள்- பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்நாட்டு- வெளிநாட்டு இராஜதந்திரிகள்- முக்கியஸ்தர்களுடன் நாடளாவிய ரீதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத் தேசிய மாநா ட்டில் உரையாற்றிய ஜனாதிபதி தமது ரையில் மேலும் தெரிவித்ததாவது :-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல தடை களையும் சவால்களையும் எதிர்கொண்டு முன்னேறியுள்ள கட்சியாகும்.
கட்சிக்காக பல தலைவர்கள் உயிர்த் தியாகங்களையும் செய்துள்ளனர். எக்காலத்திலும் மக்களுக்கான கட்சியாக செயற்பட்டு வரும் இக்கட்சியின் வரலாறு உலகிற்கே ஒரு பாடமாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. இதனால் இக்கட்சியின் வரலாற்றை பாடமாகக் கொண்டு நாம் முன்செல்ல வேண்டியுள்ளது.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காஇ டீ. ஏ. ராஜபக்ஷ போன்றோர் 1952 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்து 1956 இல் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றியபோது நாட்டு மக்கள் தமது அர சாங்கம் என்ற உணர்வுடன் பெருமைப் பட்டனர். மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அன்றும் சரி; இன்றும் சரி கட்சி பல சூழ்ச்சிகளுக்கும் தடைகளுக்கும் முகங்கொடுக்கின்றது. தேசிய- சர்வதேச சூழ்சிகள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் வந்த போது அவர் அதனைக் கண்டு சளைக்கவில்லை. துணிச்ச லுடன் அவர் சகல சவால்களையும் எதிர்கொண்டதால்தான் கட்சி இன்று மாபெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் பூரண சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1977 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போது அத்தோடு நாட்டு மக்களும் தோற்கடிக்கப்பட்டனர் என்பதே உண்மை. அப்போது கட்சியினர் பழிவாங்கப் பட்டனர். மதத் தலைவர்கள்- அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டனர். நாம் மீண்டும் புத்துயிர்பெற நீண்டகாலம் எடுத்தது. அக்காலத்திலும் நாம் மக்களுக்காக போராடுவதை நிறுத்தவில்லை. எமது கட்சியினர் பலர் பட்டியலிட்டுக் கொல்லப்பட்ட காலம் அது.
1994ல் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்தது. மீண்டும் நாம் 2001 ல் வீழ்ச்சியடைந்தோம். பல்வேறு சூழ்ச்சிகள்- தடைகள் போராட்டங்களை சந்தித்த நாம் 2004ல் மீண்டும் ஆட்சியமைத்தோம். ஜே. வி. பி. போன்ற கட்சிகள் எம்மோடு இணைந்துகொண்டன. அப்போது சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டிய தேவை எமக்கிருந்தது.
நாம் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் இணைந்திருந்தால் நாமும் நாடும் பலம் பெறும். பிரிந்திருந்தால் நாடு மட்டுமன்றி நாமும் வீழ்ச்சியடைவோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சூழ்ச்சிகள் மூலம் ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்றிய கட்சியல்ல. அதேபோன்று மக்களைக் கொன்று ஆட்சி பிடித்த கட்சியுமல்ல. நாட்டிற்கும் மக்களுக்கும் நிரந்தர சுதந்திர த்தைப் பெற்றுக்கொடுத்த கட்சியாகும். சகலருக்கும் வாய்ப்பளித்த கட்சி இது. இக் கட்சிக்குள் வந்தவர்கள் வெற்றிபெற் றுள்ளார்கள் வெளியே சென்றவர்கள் வீழ்ச்சியடைந்தார்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.
நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டு உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்பவர்கள் நாம் உலகில் எந்தவொரு கட்சியோடு ஒப்பிடுகையிலும் நாம் இரண்டாம் நிலைக் கட்சியல்ல.
எதிர்காலத்தில் எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாட்டை ஒன்றிணைத்தது போல் சகல இன- மத- மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். சகலரும் எமது சேவையைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எதிர்காலத்திலும் நாம் பல தேசிய- சர்வதேச எதிர்ப்புகளையும் அழுத்தங்களையும் சந்திக்க நேரும். எனினும் மக்களுக்காக நாம் உழைத்தால் நாம் மக்கள் பக்கம் இருந்தால் எவரும் எம்மை ஒன்றும் செய்ய முடியாது.
நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய சகல சக்திகளும் கட்சிகளும் எம்மோடு உள்ளன. பாராளுமன்ற பலம்- மாகாண- பிரதேச பலம் எம்மிடமுள்ளது. கடந்த கால வரலாற்றை பாடமாக்கிக் கொண்டு நாம் முன்செல்வோம். சிறு வதந்திகள் கூட எமக்கு பெரும் நட்டமாக அமைந்து விடலாம். நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (எம்.ரி.-977))








ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...