Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் 8 கோடி 18 இலட்சம்ரூபா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

8 கோடி 18 இலட்சம்ரூபா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

panam

சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட 8 கோடியே 17 லட்சத்து 68000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுக்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.

நேற்று அதி காலை 1.10க்கு புறப்பட்டுச் செல்வதற்காக வந்த நபரிடம் இருந்தே மேற்படி வெளிநாட்டு பண நோட்டுக்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர்.

சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாக இவ்வாறு பெருந்தொகையான வெளிநாட்டு பண நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பண நோட்டுக்களை கடத்த முற்பட்டதாகவும் இதற்கு முன்னர் இவர் மூன்று தடவைகள் வெளிநாட்டு கரண்சி நோட்டுக்களை கடத்தியுள்ளதாகவும் மாலி பியசேன தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ)