கட்டம் கட்டமாக அமைக்கத் திட்டம்
கொழும்பில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வசிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாக பதில் அமைச்சரபை பேச்சாளரான அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.குறைந்தபட்சமாக 30 ஆயிரம் வீடுகளின் தேவை நிலவூகின்ற போதிலும் அதனைக் கட்டம் கட்டமாக நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் ஆயிரம் வீடுகளை அமைக்க முடிவூ செய்யப்பட்டதுடன் அதில் 320 வீடகள் கொழும்பு தெமட்டகொடைப் பகுதியில் நிர்மனிக்கப்பட்டுள்ளது.
இந்த 320 வீடுகளிலும் கொழும்பு கொம்பனித் தெரு வீடுகளில் இருந்து அப்புரப்படுத்தப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட உள்ளனர்.
அடுத்த கட்டமாக 500 வீடுகளை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியூள்ளதுடன் அதற்கான ஒப்பந்தத்தை ஊள்ளுர் ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் வழங்கவூம் முடிவூ செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்துக்கு ஏற்ப இதற்கு 952 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (எஸ்.டி.எம்.ஐ)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...