பரீட்சார்த்தமாக பயன்படுத்த அமைச்சு நடவடிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு ‘மிரேக்கல்’ எனும் எரிபொருளை பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
‘என். மிரேக்கல் பவர் பிரைவட் லிமிட்டட்’ எனும் தனியார் கம்பனியின் உற்பத்தியான இந்த எரிபொருள் சூழலுக்கு பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.டீசலின் விலையிலும் லீற்றருக்கு 20 ரூபா வீதம் குறைவாக வழங்க இந்நிறுவனம் இணக்கம் தெரிவித்திருப்பதனால் இதனை இ. போ. ச. பஸ்களில் பரீட்சித்துப் பார்க்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
குறைந்த செலவில் கூடுதல் இலாபம் தரக்கூடிய இத்தகைய எரிபொருளை டீசலுக்கு பதிலாக உபயோகிப்பதன் மூலம் மக்களுக்கு பரந்த சேவையை வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. (எஸ்.டி.எம்ஐ)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...