அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவிப்பு
தருஷ்மன் அறிக்கை நடைமுறைகளுக்கு முரணான வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கை தொடர்பில் ஆரய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் சமரசிங்க அங்கிருந்தவாறு தகவல் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கைக்கு மிகப்பெரிய ஆதரவு காணப்படுகின்றது. இதுவரை பல நாடுகளின் பிரதிநிதிகளுடனும் அமைப்புக்களுடனும் விரிவான முறையில் பேச்சு நடத்திவருகின்றோம்.
குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஐ.நா. வின் தருஷ்மன் அறிக்கையை பேரவைக்கு சமர்ப்பித்துள்ளனர். எனவே அதனை எந்த வகையிலும் பேரவையில் ஆராயாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில் சகல நாடுகளையும் தெளிவுபடுத்தியுள்ளோம். அதிகளவான நாடுகள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்த வகையில் தருஷ்மன் அறிக்கையை பேரவையில் இம்முறை ஆராய்வதற்கு இடமளிக்கமாட்டோம்.
அதாவது எந்தவொரு விடயத்தையும் சட்டவிரோதமாகவும் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டும் செய்தால் அது வெற்றிபெறாது என்பதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். தருஷ்மன் அறிக்கையை பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டே கொண்டுவந்தனர் என்றார்.(எம்.ரி.-977)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...