Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் ஊடகவியலாளர் விவேகராசா காலமானார்!

ஊடகவியலாளர் விவேகராசா காலமானார்!

vivek

30 வருட கால ஊடகப்பணி
வவுனியாவைச் அசேர்ந்த  சிரேஷ்ட ஊடகவியலாளர்  ரி.விவேகராசா நேற்று அதிகாலை காலமானார்.

 

 

இறக்கும்போது இவருக்கு வயது 56 ஆகும். கடந்த 30 வருடங்களாக ஊடகத்து றையில் பணியாற்றிவந்த இவர் கடந்த ஒரு வாரத்து க்கும் மேலாக உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இவர் நேற்று அதிகாலை 12.30 மணியள வில் காலமானார். அன்னா ரின் இறுதிக் கிரியைகள் இல 132  ரம்பைக்குளத் திலுள்ள அவரது வீட்டில் நடை பெற்று தகனக் கிரியைக்காக பூதவுடல் இன்று பிற்பகல் 3 மணிய ளவில் வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

வன்னி பிரதேச ஊடகவியலாளர் சங் கத்தின் பொதுச் செயலாளராக இவர் 10 வருடங்கள் இருந்து வந்தார்.

1955ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது கல்வியை வவுனியா மத்திய மகாவித்தியா லயத்தில் தொடர்ந்தார்.

ஊடகத்துறையைத் தேர்வுசெய்து பணியாற்றிவந்த விவேகராசா ரம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் ஆசிரியரான தங்கேஸ்வரியின் கணவராவார்.

நாட்டிலிருந்து  குறிப்பாக வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலார்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியபோது துணிவுடன் நாட்டிலிருந்து பிராந்திய செய்திகளையும் தகவல்களையும் ஊட கங்களுக்கு இவர் வழங்கி வந்தார்.

தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரமன்றி ஆங்கில  சிங்கள பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்களுக்கும் களநிலவரங்களை வழங்கிய துணிச்சல் மிக்க ஊடகவியலாளர் இவர். (எஸ்.டி.எம்.ஐ)