Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி!

இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி!

naval_ex

திருமலை கடற்பரப்பில் இன்று முதல் 24 வரை

இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி இன்று (19) திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பிக்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

‘ஸ்லிநெக்ஸ் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை திருமலை கடற்பரப்பில் நடைபெறும்.

இதன் போது இரு நாட்டு கடற்படையினரும் பயிற்சிகளை பரிமாறிக் கொள்வதுடன் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இது சிறந்ததொரு சந்தர்ப்பமெனவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.

இதன்போது இலங்கை கடற்படை சார்பில் 11 போர் கப்பல்களும் இந்தியக் கடற்படை சார்பில் 07 போர் கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடும். (எஸ்.டி.எம.;ஐ)