Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் ஜனாதிபதி இலங்கை நிலை பற்றி உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்!

இலங்கை நிலை பற்றி உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்!

  • PDF
geniva-22

ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகள் சிலவற்றின் அரச தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. நைஜீரியா- ஸ்லோவேனியா- ஆகிய நாடுகளின் அரச தலைவர்களையே ஜனாதிபதி சந்தித்துள்ளதுடன் இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இச்சந்திப்புக்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நெருக்கடிகளுக்கு பிற்பட்ட முகாமைத்துவ பணிகள் மற்றும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் ஆகியவற்றில் கண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் விடயங்களை விளக்கிக் கூறினார்.

மேலும் நாட்டில் செயற்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பாகவும் பொருளாதாரத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் ஜனாதிபதி  அரச தலைவர்களுக்கு விளக்கியுள்ளார்.(எம்.ரி.-977)