Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் ஜனாதிபதி நியூயோர்க்கில் ஜனாதிபதியுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை!

நியூயோர்க்கில் ஜனாதிபதியுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை!

  • PDF
manmohansingh

நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள்- போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு பணிகள்- இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இலங்கையில் போரினால் புலம் பெயர்ந்த தமிழர்களை அவர்களுடைய வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்துவது- அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு பணிகளை செய்து முடிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசித்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணியுடன் தமது அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை விவரங்களை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அன்னிய நாட்டின் தலையீடு இல்லாமல் வெற்றிகரமாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை மன்மோகன்சிங் வலியுறுத்தி கூறினார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்வது தொடர்பான பிரச்சினை குறித்தும் அதற்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். (எம்.ரி.-977)