Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள் இலங்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் கண்டுபிடிப்பு!

இலங்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் கண்டுபிடிப்பு!

HE

இலங்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது முதற்தடவையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று காலை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்- எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இன்று காலை தனக்கு இத்தகவலை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை-இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிவாயு வயல்கள் காணப்படுவதாக கெயிரின் இந்திய நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அறிவிப்பினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும்இ 1354 மீற்றர் வரை ஆழம் வரை துளையிட்டதில் எரிவாயு வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வணிக நோக்கத்திற்கு இன்னமும் ஆழ்ந்து துளையிடப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (எம்.ரி.977)