இந்த வருட சிறுபோக நெல் உற்பத்தி இலங்கை வரலாற்றிலேயே ஒரு பெரும் சாதனையை ஏற்படுத்தும் என விவசாய பொருளியலாளரான கலாநிதி எல்.பி.ரூபசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்-
இலங்கை முழுவதும் சுமார் 501017 ஹெக்ரயர் நிலப்பரப்பில் 2011 சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் ஆரம்பிக்ப்பட்டுள்ள நிலையில்- சுமார் 1916138 மெற்றிக் தொன் நெல் அறுவடையினை எதிர்பார்க்க முடியும்
தற்போது இலங்கையின் நெற் சந்தைப்படுத்தல் சபையானது சிறுபோக நெல் அறுவடையினை கொள்வனவு செய்து வருகின்றது. எனினும் கட்டுப்பாட்டு விலையினை வெற்றிகரமாக அரசினால் மேற்கொள்ள முடியாதுள்ளது. இதனால் சந்தையில் நிலவும் கேள்வி - நிரம்பல் அடிப்படையில் உருவாக்கப்படும் விலைகளில் விவசாயிகள் தமது நெல்லினை விற்க வேண்டியுள்ளது.
இலங்கையில் அரிசி மாவிற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்இ அரிசி மா உற்பத்தியாளர்கள் தற்போது சந்தையில் காணப்படும் நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி நன்மையடைய வாய்ப்பு உள்ளதாக விவசாய பொருளியலாளரான கலாநிதி எல்.பி.ரூபசேன மேலும் தெரிவித்துள்ளார்.(எம்.ரி.-977)
