தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 29ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது அரசு தரப்பினருடனும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பல்கலைக்கழக மாணவர்களுடனும் மற்றும் அரசியல் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
ரொபேட் ஓ பிளேக் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (எம்.ரி.-977)
