இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற விசேட ஏற்பாடுகள்!

america

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள அயரின் சூறாவளியினைத் தொடர்ந்து அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய 24 மணி நேர அவசர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த அவசர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தூதுவராலயம் விடுத்துள்ள அறிக்கையில் 2023520355 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கையில் உள்ளவர்கள் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள தமது உறவினர்கள் குறித்த  தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூறாவளியானது அமெரிக்காவின் கிழக்கு கரையோர பிரதேசத்தின் ஊடாக மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக வானிலை நிலையங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (எம்.ரி.-977)