தேன் கலந்த இளநீர் அருந்தி உண்ணாவிரத்தை முடித்தார் அண்ணா ஹசாரே!

hasare

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அண்ணா ஹசாரே 13 நாட்கள் வரை இருந்த உண்ணாவிரதத்தை நேற்றுக்காலையில் தேன் கலந்த இளநீர் அருந்தி முடித்துக்கொண்டார்.

இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்தது. அதேசமயத்தில் தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே அடுத்த கட்ட இலக்கு என்றும் ஹசாரே தெரிவித்துள்ளார்.

நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி பிரபல காந்தீயவாதியான அண்ணா ஹசாரே-
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார்.

இதனையொட்டி ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. லோக்பால் மசோதாவுக்கான விதிமுறைகளை உருவாக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் அண்ணா ஹசாரே தலைமையில் சிவில் உறுப்பினர்கள் 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

அண்ணா ஹசாரே தனது 13 நாள் உண்ணாவிரத்தை நேற்றுக்காலையில் சரியாக 10.20 மணிக்கு முடித்துக்கொண்டார். உண்ணாவிரதத்தை தலித் சிறுமி சிம்ரன்-முஸ்லீம் சிறுமி இக்ரா ஆகியோர் ஒரு டம்பளரில் தேன் மற்றும் இளநீர் ஆகியவைகளை கலந்து ஹசாரேவுக்கு கொடுத்தனர். அதை ஹசாரே அருந்தி தனது 13 வது நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.(எம்.ரி.-977)