எம்.ஜே.எம். தாஜுதீன்
நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவூச் சுமையைத் தாங்கமுடியாமல் திகைத்து நிற்கும் வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் அறிமுகப்படுத்தவூள்ள தேசிய திட்டமே ~திவி நெகும|
நாட்டு மக்களின் குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தை இம்மாதம் 12 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் அமுல் படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை; மேற்கொண்டுள்ளது.
தனித்து இயங்கிய 18 அமைச்சுக்கள் இத்திட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு தேவையான நிதியை திறைசேரி வழங்கும்.
நாடளாவிய ரீதியில் சகல கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தலா நூறு குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று வருடத் திட்டமாக இக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவூள்ளது.
ஒவ்வொரு நூறு குடும்பங்களுக்கும் ஒரு கிராம சேவகர் ஒருசமுர்த்தி அதிகாரி ஒரு விவசாய ஆராய்ச்சி அதிகாரி ஒரு குடும்ப சுகாதார அதிகாரியென அக்கிராமத்திலிருந்தே நான்குபேர் நியமிக்கப்படுவர்
அக்குடும்பங்களின் சகல தரவூகளையூம் அவ்வதிகாரிகள் திரட்டி அவற்றின் வருமானம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான விடயங்களை அவர்கள் கவனத்திற்கொள்வர். அத்துடன் அக்குடும்பங்களின் மேலதிக வருமானங்கள் தொடர்பிலும் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவூள்வர்.
அக்குடும்பங்களின் ஜீவனோபாயம் தொழில்துறை தொழில் தொடர்பான இதர சகல விடயங்களிலும் அவ்வதிகாரிகள் உதவூவர். இதற்கு மேலாக மாவட்ட மற்றும் மாகாண ரீதியிலும் இதனை மேற்பார்வை செய்ய உதவிச் செயலாளர்கள் தரத்திலான உயரதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
‘திவி நெகும’ குடும்ப பொரு ளாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் முதற்கட்டமாக. அன்றாட வீட்டுப் பாவனைக்குத் தேவையான மரக்கறி மற்றும் கீரை வகைகளைப்; பயிரிடும் வீட்டுத் தோட்டம் அமைத்தல்- போஷாக்கு உணவான பாலைப் பெற்றுக்கொள்ளவூ+ம் இயற்கை உரவகைகளைப் பெறவூ+ம் கால்நடை வளர்ப்பு வீட்டு;க் கைத்தொழில் மற்றும் நன்னீh; மின்வளா;ப்பு ஆகிய தி;ட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
இதற்காக பத்துலட்சம் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் நன்மையடையூம்..
விவசாயத்துறையில் ஈடுபடுபவர்களெனில் விதை- உரம்- விவசாயத்திற்கான உபகரணங்கள் உட்பட சகல உதவிகளையூம் அங்குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் அவ்வதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற் படுவர்.
கால்நடை வளா;ப்பில் ஆh;வம் காட்டுபவா;களுக்கு கால்நடைகளும் கோழி வளா;ப்பில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு கோழிக் குஞ்சுகள் என்பன இந்த நிதி மூலம் வழங்கப்படும்.
ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சா; பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஊடகவியலளா; சந்திப்பின்போது இத்திட்டம் பற்றி முதலில் அறிவி;க்கப்பட்டது. அதன்பின்னா; பல அமைச்சா;கள் இது குறித்து ஊடகவியலாளா;களுக்கு விளக்கமளித்தனா;.
எனினும் இத்திட்டத்;தை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக கொண்டு செல்வதாயின் ஊடகவியாலளாளா;களின் பங்களிப்புத் தேவை என்பதை உணர்ந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளா;களுக்கு அறிவூறுத்தும் செயலமா;வூ ஒன்றை ஏற்பாடு செய்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளா; நாயகம் பேராசிரியா; ஆரியரத்ன அத்துகல இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இச்செயலமர்வூ கடந்த 7 ஆம் திகதி நடைபெற்றது.
மிகவூம் இரம்மியமானதெரு கிராமத்து சு+ழலில் உருவாக்கப்பட்டிருந்த ~மிஹிலக மெதுர| என்ற அரங்கத்தில் அமைச்சர் குத்துவிளக்கேற்றி இச்செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.
அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்இ
எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்படவூள்ள வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கான பத்து இலட்சம் மனைப் பொருளாதார அலகுகளை உருவாக்கும ~திவி நெகும| திட்டத்தின் வெற்றி மக்கள் கைகளிலேயே தங்கி உள்ளது.
நாட்டு மக்கள் மத்தியிலான போஷாக்கின்மையை போக்கவூம் குடும்பங்களின் பெருளாரதார நிலையை மேம்படுத்தச் செய்வதற்குமான “திவி நெகும” திட்டம் குறித்து ஊடகவியலாளர்ளை அறிவூறுத்துவதற்காகவே இச்செயலமர்வை ஆரம்பித்தோம். எனவே ஊடகவியலாளா;கள் இத்திட்டத்தின் நன்மைகளை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்;டும்.
இந்த அபிவிருத்தித் திட்டம் அரசாங்கத்தின் திட்டமல்ல. பாலம் அமைப்பது வீதி அமைப்பது துறைமுகம் கட்டுவது போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் செய்து வருகின்றது.
எனினும் “திவி நெகும” திட்டத்தை மக்கள் மனது வைத்தால் தான் வெற்றிபெறச் செய்ய முடியூ+ம். மக்கள் அனைவரும் இதில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். அதனால்தான் இது மக்கள் திட்டமாகஇ ஒரு தேசிய திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.
வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்வது மட்டுமல்ல இதன் நோக்கம். அதற்கு அப்பாலும் செல்லக் கூடியதாக இத்திட்டம் அமைகிறது.
சுமாh; 25 வருடகால தூரநோக்குடனேயே இத்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியூள்ளது என்றார்.
இங்கு அமைச்சர் ரெஜினோல்ட் குரே கருத்துத் தெரிவிக்கையில்இ
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ~திவி நெகும| திட்டத்தை பொது மக்களின் நெஞ்சங்களில் பதிய வைக்கும் பணியை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளவேண்டும்
உலகரீதியில் எதிர்நோக்கப்பட்ட ஆறு சவால்களை எமது நாடு வெற்றிகரமாகச் சமாளித்து இன்று முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுகின்றது.
சுனாமியால் சிதைவடைந்த தேசத்தையே எமது ஜனாதிபதி பொறுப்போற்றார். எனினும் இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஒன்று நடைபெற்றதற்கான அறிகுறியே இல்லாத அளவில் அவர் நாட்டைக் கட்டியெழுப்பியூ+ள்ளார்.
அதன் பின்னர் ஏற்பட்ட உலக பொருதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாகச் சமாளித்தது. 8 ஆயிரம் ரூபா பெறுமதியான உரத்தை விவசாயிகளுக்கு 350 ரூபா மானிய விலையில் ஜனாதிபதி வழங்கியதால் அந்த நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டது.
அதன்பின்னர் உலக நிதி நெருக்கடி- அதைத் தொடர்ந்து எரிபொருள் விலையேற்றம் - இப்படியாக எல்லாச் சவால்களையூ+ம் வென்ற ஜனாதிபதி இறுதியாக பயங்கரவாதத்தையூ+ம் வெற்றி கொண்டார். இன்று ஆசியாவின் ஆச்சரிய நாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது.
இன்று நாட்டில் அமைதியான சு+ழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதியைப் பயன்படுத்தி நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவே ~திவி நெகும| திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும். முக்கியமாக ஊடகவியலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.
நாட்டு மக்களின் குடும்பப் போஷாக்கு மற்றும் பொருளாதார மேம்பாடு என்பவற்றை இலக்காகக் கொண்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ள மனைப் பொருளாதார அலகுகள் 10 லட்சம் உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்துக்கு ஊடகவியலாளர்களும் பொது மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
09.03.2011
