இவ்விருதைப் பெறும் முதல் தமிழ் நடிகா;
மலையாளத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஏசியாநெட் விருதுப் பட்டியலில் முதல்முறையாக தமிழ் நடிகர் விஜய்யின் பெயா; இடம்பெற்றள்ளது.
2010ம் ஆண்டுக்கான மலையாள ஏசியாநெட் பிலிம் விருதுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மலையாள சு+ப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும் மற்றொரு மெகாஸ்டார் மோகன்லாலுக்கு கோல்டன் ஸ்டார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது பொடிகார்ட் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இந்தவிருதுபட்டியலில் இளைய தளபதி விஜய்யூம் சேர்ந்துள்ளார். சிறந்த தமிழ் நடிகருக்கான விருது விஜய்க்கு அளிக்கப்பட உள்ளது. ஏசியன்நெட் விருது வரலாற்றில் ஒரு தமிழ் நடிகருக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக மலையாளத்தில் விஜய்யின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் நடித்த படங்கள் அங்கு ஹிட்டும் ஆகியூள்ளன. மேலும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவூம் பெருகி வருகிறது.
அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் விஜய்க்கு சிலை வைத்து தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் செய்தனர்.(எஸ்.டி.எம்.ஐ.15.00)
இந்த விழா வருகிற ஜன..9ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது.
