த.தே.கூட்டமைப்புக்கு சபை முதல்வா; பதில்
யாழ் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்தப்படும் என்று த.தே.கூட்டமைப்பின் கேள்விக்கு சபை முதல்வா; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் பதில் அளித்தாh;.
யாழ். குடாநாட்டில் இடம் பெற்ற சில குற்றச் செயல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் முழு நாள் விவாதம் நடத்தப் படுமென்றும் அதன்போது முன்வைக்கப்படும் சகல பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் பதிலளிக்குமென்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தொpவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு ள்ளதாகவூம் விவாதத்திற்கான திகதி நிர்ணயிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.
யாழ். குடாநாட்டுப் பிரச்சினைகள் குறித்து தாம் சபையில் முன்வைத்த கவனஈர்ப்பு பிரேரணைக்கு அரசு இன்று (06) பதில் அளிக்குமா? என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் இதனை அறிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.11.00)
