மொனராகலை மாவட்ட அபிவிருத்திக்கு 10ஆயிரம் மில்லியன்
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி காரணமாக மொனராகலை மாவட்டத்தில் பத்தாயிரம் மில்லியன் ரூபாவூக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தொpவித்தாh;.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தொpவித்தார்.
ஊடகங்களின் பாhpய ஒத்துழைப்பினால் நான்கு முறைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தேசத்துக்கு மகுடம் கண்காட்சி ஐந்தாவது தடவையாக இம்முறை பல வெற்றிகரமான மாற்றங்களுடன் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட ஆலோசனைக்கு ஏற்ப இம்முறை அபிவிருத்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதையே குறிக்கோலாக கொண்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படவூள்ளது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பங்கினை நோக்கும் போது அதில் 50 வீதம் மேல் மாகாணத்தைக் கொண்டுள்ளதுடன் ஏனைய பகுதிகள் பொருளாதார அபிவிருத்தியில் 5 வீதத்தைக் கொண்டதாகவே காணப்பட்டன.
அந்த நிலமையை மாற்றியமைக்கும் ஒரு பாhpய முயற்சியாகவே இந்தக் கண்காட்சியைச் சாh;ந்ததாக குறிப்பிட்ட பிரதேசத்தில் அபிவிருத்ததித் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி இப்பிரதேசங்களில் 10 ஆயிரம் மில்லியனுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் 4000 மில்லின் செலவில் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 17 மில்லியன் செலவில் மின் விநியோகம் 500 மில்லியன் செலவில் குடிநீh; விநியோகம் என பல வகையான அடிப்படை அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடமாடும் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன. 11 பிரதேச சபைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகள் மூலம் 11ஆயிரம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் 20 ஆயிரம் காணி உறுதிகளும் வழங்கப்பட்டன.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் சமகாலத்தில் பல போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி தேசிய மற்றும் சா;வதேச தரத்துக்கு ஒத்த விளையாட்டு வீரர்களை இனம்காணும் திட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி முதற்கட்டமாக கிராமம்; மாவட்டம் மாகாணம் என்ற அடிப்படையில் சைக்கிள் ஓட்டம் கரப்பந்தாட்டம் கூடைப்பந்தாட்டம் கபடி போன்ற போட்டிகளை நடத்தி தேசிய மட்டத்தில் இறுதிப் போட்டியை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை இலங்கைக்கு மட்டும் என மட்டுப்படுத்தாமல் இதனூடாக நாட்டின் அபிவிருத்தியின் முன்னேற்றத்தை உலகுக்கே கொண்டுசெல்ல எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒருநாளில் பார்த்து முடிக்க முடியாத அளவில் உள்ள இக்கண்காட்சியை வருகின்றவா;கள் தங்கி நின்று பாh;க்கவூம் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா; சியம்பலாப்பிட்டிய மேலும் தொpவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.13.30)
