அமைச்சரவைத் தீர்;மானங்கள்

பட்டம் வழங்கும் அதிகாரம்!

பட்டம் வழங்கும் அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனமாக தேசிய வா;த்தக முகாமைத்துவ கல்வி நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஊடாக வருடத்துக்கு 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகாதோருக்கு மேற்படிப்பைத் தொடர் வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் இந்த நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி!

2018 ஆம் ஆண்டு நடைபெறவூள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடருவதற்கு அமைச்சரவை முடிவூ செய்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கு இணங்க அம்பாந்தோட்டையை விளையாட்டு நகராகத்; தெரிவூ செய்வதற்கும் அது தொடர்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவூம் முடிவூ செய்யப்பட்டுள்ளது.

வைத்திய சாலைகள் அபிவிருத்தி

அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலிய வைத்திய சாலைகளை நெதர்லாந்து அரசின் நிதி உதவியின் கீழ் 86.49 மில்லியன் யூ+ரோ செலவில் அபிவிருத்தி செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு இணங்க இந்த முடிவூ எடுக்கப்பட்டுள்ளது.

லிபியாவூடன் புரிந்துணர்வூ உடன்படிக்கைகள்!

அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்துவரும் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடான லிபியா இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் பொதியை வழங்க முன்வந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் லிபியா விஜயத்தின்போது இந்த கடன் திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி தொடர்பு சாதனம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஆகியன தொடர்பாக கைச்சாத்திடப்பட்ட 3 புரிந்துணர்வூ உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்!

கொழும்பு நகர மத்தியை வருமானம் மிக்க வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும் நோக்கில் காலிமுகத்திடல் இராணுவத் தலைமையகத்துக்கு அண்மையில் புதிதாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றையூம் பல்துறை செயலக கட்டடத் தொகுதியொன்றையூம் அமைக்க முடிவூ செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சா; பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப நிறைவேற்றப்பட்ட இந்த தீh;மானத்;தி;ன் ஊடாக 1000 மில்லியன் அமெரிக்க டொலா;கள் நேரடி முதலீடாகக் கிடைக்கின்றது.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

நாட்டில் நிலவூம் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 10 இலட்சம் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவின் ;அடிப்படையில் சுமார் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமைக்கு அமைச்சரவை ஜனாதிபதிக்கு விசேட நன்றியைத் தெரிவித்துள்ளது.

தேசத்துக்கு மகுடம்!

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் தொடா; நிகழ்ச்சியாக புத்தள குடிநீh; விநியோகத் திட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு அமைச்சரவை தீh;மானித்துள்ளது.

நீh;வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசணையின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்துக்கு 175 மில்லியன் ரூபாவை ஒதுக்கவூம் முடிவூ செய்யப்பட்டது.(எம்.ரி.977இ எஸ்.டி.எம்.ஐ.)