இலங்கையில் இந்திய விமானப் படை தளபதி!

Un_india_man

ஜனாதிபதி உட்பட பலருடன் சந்திப்பு

இந்திய விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் பிரதீப் வசன்ந் நாயிக் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று பிற்பகல் 1.32 மணியளவில் பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமானப்படைத் தளபதியை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க வரவேற்றார்.

நான்கு நாள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய விமானப் படைத் தளபதி  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். (எஸ்.டி.எம்.ஐ.14.00)