பெருமபாலான வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Ballot_box

உத்தியோகபூர்வ    இறுதிப்  பட்டியல்  இன்று   வெளியிடல்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ  இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படவூள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி   உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று அறிவித்தார்.

4 மாநகர சபைகள்  39  நகர சபைகள் மற்றும்  258  பிரதேச சபைகள் என்பவற்றுக்கு  நடத்தப்படும்  இந்தத்  தேர்தலின்  மூலம்  3931  பேர் தெரிவு  செய்யப்பட  உள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் திகதி ஆரம்பமாகி நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  ஐ.தே.க.  தமிழரசுக் கட்சி  முஸ்லிம் காங்கிரஸ்  ஜே.வி.பி.  உட்பட  பிரதான  கட்சிகள் பலவற்றின்  கூடுதலான  வேட்பு மனுக்கள்  இம்முறை நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வேட்புமனு தொடர்பான இறுதிப் பட்டியல் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை.  உத்தியோகபூர்வ  இறுதி வேட்புமனுப் பட்டியல்  இன்று  வெளியாகுமென  தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதான கட்சிகள் மற்றும் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் நேற்றே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தன. வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாவட்ட செயலகங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த 16 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இது தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் 3 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காலி மாவட்டத்தில் அக்மீமன பிரதேச சபை  இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபை  மொனராகலை மாவட்டத்தில்  உள்ள மொனராகலை  மற்றும்  சியம்பலதுவ பிரதேச சபைகள்  குருநாகலை  மாவட்டத்தில்  பொல்கஹவல பிரதேச சபை  மாத்தளை  மாவட்டத்தில்  வில்கமுவ  மற்றும் பல்லேபொல  பிரதேச  சபைகள்  கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச  சபை  நுவரெலிய  மாவட்டத்தில் லிந்துல- தலவாக்கலை நகர சபை   நுவரெலிய பிரதேச சபைகள் என்பவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகமவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபையிலும்  இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய  நகர சபையிலும்  ஐ.தே.க. வின் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை  காலி மாவட்டத்தில் பத்தேகம பிரதேச சபை கேகாலை மாவட்டத்தில்  வரக்காபொல  பிரதேச சபை  மட் டக்களப்பு மாவட்டத்தில்  ஏறாவூர் நகர சபை  என்பவற்றின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள தாக அறிய வருகிறது.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ்  கம்பஹா மாவட்டத்தில்  அத்தன கல்ல பிரதேச சபைக்கும்  மினுவாங் கொடை நகர சபைக்கும் மாத்தளை மாவட்டத்தில்  உக்குவளை பிரதேச சபைக்கும்  கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேச சபைக்கும்  சமர்ப்பித்த வேட்பு மனுக்கள்   நிராக ரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

ஜே.வி.பி. மாத்தளை மாவட்டத் தில் வில்கமுவ பிரதேச சபை  புத்தளம் மாவட்டத்தில்  நாத்தாண்டிய  பிரதேச சபை என்பவற்றிற்கு தாக்கல்  செய்த  வேட்பு மனுக்களும்  தமிழரசுக் கட்சி  கிளிநொச்சி மாவட்ட த்தில் பூநகரி  பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த  வேட்பு மனுக்களும்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலக வட் டாரங்கள்  கூறின.

பிரஜைகள் முன்னணி  துணுக்காய் பிரதேச சபைக்குத்  தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள் ளதாக மாவட்ட செயலக வட்டாரங் கள்  கூறின.
இது தவிர நவசமசமாஜ கட்சி ஜனசெத்த முன்னணி  உட்பட  மேலும் சில கட்சிகளினதும்  பெரும் பாலான  சுயேச்சைக் குழுக்களினது வேட்பு மனுக்களும்  நிராகரிக்கப் பட்டதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின.  வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை  ஆட்சேமித்து வழக்குத் தொடரப்  போவதாக  பிரதான  கட்சிகள்  அறிவித்துள்ளன.

இம்முறை  தேர்தலில் 14 315 417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். (எஸ்.டி.எம்.ஐ.09.30)