யாழ் கொள்ளைக் கோஷ்டி கைது!

Mj_hathurusinghe

இராணுவத்தினர் முயற்சி     வெற்றி

இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சியினால் யாழ்ப்பாணத்தில் வீடுடைப்புஇ வழிப்பறிஇ கொள்ளைச் சம்பவங்களpல் ஈடபட்டு வந்த ஒன்பது பேர் கொண்ட கோஷ்டி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ். கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட போதே ஏனைய எட்டுப் பேரும் யாழ் குருநகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட தாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

யாழ். கோப்பாய் பகுதியில் வீடுடைப்பு சம்பவம் தொடர்பாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவத்தினர் இரவு சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர்.
பொலிஸாரின் தீவிர விசாரணையின் பின்னர் இவர்களிடமிருந்து 100 பவுண் நகைகளும்  மீட்கப்பட்டதாக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

யாழ். நகரில் ஆங்காங்கே நடைபெற்ற வீடுடைப்பு வழிப்பறி சங்கிலி அறுப்பு போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட பவுண் தங்கநகைகளை மீட்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒன்பது பேருடன் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (எஸ்.டி.எம்.ஐ.10.00)