இசை நிகழ்ச்சியை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு!

he_the_president_ss

கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிக்காக கண்டியிலும் அம்பாந்தோட்டையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்துச் செய்து அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அமைச்சு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சின் ஏற்பாட்டில் இம்மாதம் 15 ஆம் 19 ஆம் திகதிகளில் கண்டியிலும் அம்பாந்தோட்டையிலும் கேளிக்கை இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்.ரி.-977)