உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக நாட்டில் முற்றிலும் உலர்ந்த காலநிலை ஏற்படுவதற்கு சில மாத காலம் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போதைய நிலைமையானது குறைந்தபட்சம் இன்னும் 2-4 மாதங்கள் நீடிக்கும் அதாவது ஏப்ரல் அல்லது மே முற்பகுதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்: எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கலாம். என்ற போதிலும் முற்றாக உலர்ந்த காலநிலையை எதிர்பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார்.
நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாழமுக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அவர் கூறினார்.
காற்றின் காரணமாக வெப்பநிலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(எம்.ரி.-977)
