இலங்கை பாதுகாப்புப் படையினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களில் இலங்கைக் கடற்படை 40 நிவாரணக் குழுக்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளத்தால் உயிராபத்துக்களை எதிர்நோக்கியுள்ள மக்களைக் காப்பாற்றும் பணியில் பிரதேச அரசாங்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உலர் உணவு மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விமானப் படையினர் கடந்த வியாழக்கிழமையில் இருந்து இதுவரையில் 50 பேரின் உயிரைக் காப்பாற்றியு ள்ளனர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளர் எனவூம் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (எம்.ரி.-977)
