கிழக்கில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் வழமைக்கு!

School_children

மாகாண  கல்விப்  பணிப்பாளர்  தகவல்

வெள்ளம் காரணமாக மூன்று தினங்களுக்கு மூடப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகள் மீண்டும் நாளை முதல் இயங்க உள்ளன.

வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகள் மீண்டும் நாளை (10) முதல் திறக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தால் மாகாணத்தில் 50 வீதமான பாடசாலைகள் இயங்க முடியாத நிலை நிலவியது.

கடந்த மூன்று தினங்களும்  மகாஓயா - தெஹியத்தக்கண்டிய ஆகிய வலயங்கள் தவிர்ந்த ஏனைய 14 கல்வி வலயங்கள் மூடப்பட்டிருந்தன.

அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை வலயப் பாடசாலைகள் மீண்டும் நேற்றிலிருந்து இயங்க ஆரம்பித்துள்ளன.

நாளை இயங்க முடியாத பாடசாலைகள் இருப்பின் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அது பற்றித் தீர்மானிக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. (எஸ்.டி.எம்.ஐ.12.30)