நாட்டின் சகல மாவட்டங்களையூம் பிரதிநிதிப்படுத்தும் வகையில் 7000 விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விவசாய மாநாடு இன்று காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
~குடும்ப போஷாக்கு மற்றும் பொருளாதார அபிவிருத்தி| என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதி விவசாய உபகரணங்களை வழங்கினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சா; பசில் ராஜபக்ஷ- விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன – ஜனாதிபதியின் செயலாளா; லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)
