மீண்டும் டெங்கு அபாயம்!

mosquito

இரண்டு  மாதங்களில்  18  பேர்  பலி

நாட்டின்  பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 1722 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

கொழும்பு   கம்பஹா  புத்தளம்  யாழ்ப்பாணம்  மட்டக்களப்பு  களுத்துறை  ஆகிய மாவட்டங்களில்  இந்நோயhல் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக அப்பிரிவூ மேலும் தெரிவிக்கின்றது.

கடந்த வருடத்தின் நவம்பர்  டிசம்பர் மாதங்களில் டெங்கு நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்து காணப்பட்டது.

குறிப்பிடப்பட்ட காலத்தில்  மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு நடவடிக்கைகள்  இதற்கு பெரிதும் உதவின. (எஸ்.டி.எம்.ஐ.10.00)