321595 பேர் வாக்களிக்கத் தகுதி
இன்று ஆரம்பமான 235 உள்ளூராட்சி சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை முடிவடைகிறது.
தபால்மூல வாக்களிப்பில் 321595 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால்மூல வாக்களிப்பை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் அதேசமயம் வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸாருக்கு மேலதிகமாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவு ள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்கு பவ்ரல் உட்பட இரண்டு சுதந்திரத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் சென்று வாக்களிப்பைக் கண்காணிக்க முடியும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வேட்பாளர்கள் தவிர்ந்த ஒரு கட்சிப் பிரதிநிதி வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்குச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 600க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (எஸ்.டி.எம்.ஐ13.00)
