இராஜினாமா செய்யத் தயார் !

sajith

சஜித்  பிரேமதாச அறிவிப்பு

தமக்கு ஆதரவு வழங்கும் கட்சி எம்.பிக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் நெருக்கடி கொடுப்பாராயின் தனது பதவியை இராஜினாமா செய்யவும் தான் தயாரென சஜித் பிரேமதாசா  தெரிவித்துள்ளார்.

தேசிய அமைப்பாளர் நியமனத்தை செய்வதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தடையாக இருக்கிறாரென சஜித் பிரேமதாச எம்.பி.யைச் சார்ந்த அணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் மெளனம் சாதித்துவரும் ரணில் விக்கிரமசிங்க சத்தமில்லாமல் குழிபறிக்கிறாரென  சஜித் பிரேமதாச குற்றம்சாட்டுகிறார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் நியமனம் இன்னும் இடம்பெறாததால் கட்சிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்கும் கட்சி எம்.பிக்களுக்கு தொடர்ந்தும் நெருக்கடி கொடுப்பாராயின் தனது பதவியை இராஜினாமா செய்யவும் தான் தயாரென கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். (எஸ்.டி.எம்.ஐ.10.30)