ஸ்ரீசத்ய சாய் பாபாவுடன் நெருக்கமாக இருந்தவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து ஸ்ரீசத்ய சாய் பாபாவுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீசத்ய சாய் பாபாவின் தனிப்பட்ட வைத்தியரான சத்யஜித்- வைத்தியர் ஐயர் ஆகியோர் அவருடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள்.
சாய் பாபாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சாய்பாபா அறக்கட்டளை பொறுப்புக்கு சத்யஜித் வர வேண்டும் என அறக்கட்டளை உறுப்பினர்கள் பலரும் விரும்புவதாக கூறப்படுகிறது.
சாய்பாபாவின் உடல்நிலை குறித்த வைத்திய சான்றிதழ்களை சரிவர கையாளவில்லை என வைத்தியர் ஐயர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாய்பாபா சிகிச்சை பெற்று வரும்போது வைத்தியர்கள் ஐயருக்கும்- அவரின் பக்தர்கள் சிலர் கையடக்கத் தொலைபேசியின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வைத்தியர் சத்யஜித்- வைத்தியர் ஐயர் ஆகியோர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பொது இடங்களுக்கு பாதுகாப்பின்றி செல்ல வேண்டாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.(எம்.ரி.-977)
