ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 கிலோ மீற்றர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் மாகாண சபைகளுக்குரிய சுமார் 3740 கிலோ மீற்றர் வீதிகள் கார்ப்பட் இட்டு புனரமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட 25 கிலோ மீற்றர் வீதியை கார்ப்பட் இட்டு புனரமைக்கும் நடவடிக்கையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார்.
மாகாண சபைகளுக்குரிய வீதிகள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மாகாண சபைகளே பொறுப்பேற்க வேண்டும். எனினும் மாகாணத்தில் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் வீதி புனரமைப்பு வேலைகளையும் செய்யும்போது வீதி அபிவிருத்திக்கு நிதி மட்டுப்படுத்தப்பட் டதாகவே அமைகிறது.
இதனை கருத்திற்கொண்டே மாகாண சபைக்குரிய வீதிகளை கார்ப்பட் முறையில் புனரமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. (எஸ்.டி.எம்.ஐ.14.00)
