முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணிய நடவடிக்கை
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள முஸ்லிம் மாணவியருக்கு அவர்களது கலாசாரப்படி உடை அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் சொல் ரீதியாகவும் அளிக்கப்படுகின்ற தலைமைத்துவ மற்றும் சிந்தனை மேம்பாட்டு பயிற்சியின் பிரதான அங்கு ரார்ப்பண வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்கள் தங்களது நாளாந்த சமயக் கடமைகளை வேளா வேளைக்கு நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற முஸ்லிம் மாணவ மாணவியருக்கு அளிக்கப்படுகின்ற உணவு ஹலாலானவை என்பதை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி உடை அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இவற்றுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அமைச்சர் திஸாநாயக்கா நாடெங்கிலும் அமைக்கப்பட் டிருக்கும் 28 பயிற்சி நிலையங்களதும் பொறுப்பாளர்க ளுக்கும் தனது உரையின் போது வழங்கினார். இதேவேளை எவரும் பகிடிவதைக்கு உள்ளாக இடமளியோம். பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் பல்கலைக்கழகங் களிலிருந்து வெளியேற்றப்படு வர் எனவும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாகத் தெரிவாகியுள்ள மாணவர் களுக்கு தலைமைத்துவ மற்றும் சிந்தனை மேம்பாட்டு பயிற்சி 28 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு நிலையங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக அறிகின்றேன். அக்குறை பாடுகளை அடுத்தவரும் இரண்டொரு தினங்களில் நிவர்த்திப்பதற்கு சகல நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிலையத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிகிறேன். அங்கு பயிற்சி பெறுகின்ற மாணவருக்குத் தண்ணீர் போத்தல்களை வழங்குமாறும் அதற்குரிய செலவை உயர் கல்வி அமைச்சு பொறுப்பெடுக்கும் என்றும் அமைச்சர் தனது உரையின் போது அறிவித்தார்.
இதேவேளை இப்பயிற்சியில் பங்கு பற்றுகின்ற முஸ்லிம் மாணவர்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா சபைப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் என்னைச் சந்தித்து கலந்துரை யாடினர். இப்பயிற்சியில் பங்குபற்றுகின்ற சகல முஸ்லிம் மாணவருக்கும் ஹலால் உணவு வழங்கப்படுகின்றன.
இதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
அதேநேரம் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவர்கள் தங்கள் நாளாந்த சமயக் கடமைகளை வேளாவேளைக்கு நிறைவேற்றவும்இ முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி ஆடை அணிய இடமளிக்குமாறும் பயிற்சி நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றேன்.
இந்த வதிவிடப் பயிற்சி மூன்று வாரகாலம் நடைபெறும் அதன் பின்னர் இவர்கள் மூன்று மாத காலம் தங்களது வீடுகளில் இருந்தபடி ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சியைப் பெற வேண்டும். இப்பயிற்சிக் காக நாடெங்கிலும் முன்னூறு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான நிதியுதவியை உலக வங்கி வழங்கியுள்ளது.
இதேநேரம் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கும் பயிற்சியாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தற்போது அமெரிக்க நிலையத்திலும் பிரிட்டிஷ் கவுன்ஸிலிலும் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவிஇ மாணவிகள் ஆங்கிலம்இ தகவல் தொழில் நுட்பம் பயிற்சியை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசித்ததும் ஆங்கில மொழிப் பரீட் சைக்குத் தோற்ற வேண்டும். இப்பரீட்சையில் குறைந்த புள்ளி பெறுபவர்களுக்கு அமெரிக்க தொலைக் கல்வி நிலையத்தின் ஊடாக ஆங்கிலம் போதிக்கப்படும். இத்திட்டத்திற்கென அமெரிக்கா 10 ஆயிரம் புலமைப் பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு விரிவான அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இப்பயிற்சி நெறியை பொறுத்துக்கொள்ள முடியாத சில பொறாமைக் காரர்கள் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய் தார்கள். நாம் நீதித் துறையினருக்கு இது தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறினோம் என்றார். (எஸ்.டி.எம்.ஐ.13.30)
