பிளாஸ்டிக் பெட்டிகளில் காய்கறி கொண்டு செல்லல் !

vegetable_transport

அடுத்த   மாதம்  முதல்  கட்டாயம்

பிளாஸ்டிக் பெட்டிகளைப் பயன்படுத்தி  பழவகை மற்றும் காய்கறி வகைகளை  கொண்டு செல்லும் நடை முறையை அரசாங்கம்  அடுத்த  மாதம் முதல் கட்டாயமாக்கியூள்ளது.

நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும்  பொருளாதார நிலையங்களுக்கும் 4 இலட்சம் பிளாஸ்டிக் பெட்டிகள் உள்ளிட்ட பொதிகளைப் பெற்றுக் கொடுத்து இம்மாதம் 25ம் திகதி முதல் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக  வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

அதன் பிரகாரம்  நுகர்வோர் அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழவகை கொண்டுசெல்லும் போது பிளாஸ்டிக் பெட்டிகள் உள்ளிட்ட பொதிகளை கட்டாயம் பயன்படுத்துதல் வேண்டுமென்ற வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.  (எஸ்.டி.எம்.ஐ.13.45)